நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Very heavy rain likely in Tamil Nadu from tomorrow
9.6.2025
தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு ஜூன் 13ம் தேதி முதல் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
குறிப்பாக, ஜூன் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, ஜூன் 13ம் தேதி முதல் கர்நாடகா, கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 15ம் தேதி இந்த இரு மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். ஜூன் 8 முதல் 11 வரை மேற்கு ராஜஸ்தானில் கடுமையான வெப்ப அலைகள் வீசும். ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் தவிர வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலைகள் கடுமையாக வீசும்,