June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

உதவி பேராசிரியராக திருநங்கை நியமனம்- முதல்வர் வாழ்த்து

1 min read

Chief Minister congratulates transgender woman on appointment as assistant professor

22.6.2025
லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை Dr.N.ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,” வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!” என்றார்.

முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி,” ‘டாக்டர் ஜென்சி’ என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *