June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் செல்லம்மாள் பாரதி திருமணநாள் விழா

1 min read

Chellamma Bharathi’s wedding anniversary celebration in Kadayam

25.6.2025
தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மா-பாரதியின் 128வது திருமாண விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. கடையம் நூலகத்தில் உள்ள செல்லநேற்று இன்று மாலை 6 மணிக்கு இளையபாரதம் என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி மற்றும் சொல்லரங்கம் நடந்தது. இன்று காலமும் கலையும் என்ற தலைப்புில் 2 வது நாள் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளுவர் கழக தலைவர் ஆசேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். நூலகர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.

நாதஸ்வரம், சாக்ஸபோன், கிளாரினெட், பாரதி நாட்டியஞ்சலி பரதநாட்டியம் நடந்தது. டாக்டர் தங்கபாண்டியன், டாக்டர் திருவன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக திருவள்ளுவர் கழக செயலாளர் கல்யாணிசிவகாமி வரவேற்றார். சேவாலயா முரளிதரன் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *