June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

வி.சி.க.வில் இருந்து விலகிய பனையூர் பாபு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

1 min read

Panaiyur Babu, who left the V.C.K., joined the DMK in the presence of M.K. Stalin.

7.6.2026
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., எட்டு இடங்களில் போட்டியிட்டது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மூவரும் அதிருப்தியில் இருந்தனர். பாலாஜிக்கு மட்டும் கட்சிப்பதவி வழங்கி திருமா சமாதானப்படுத்தினார். மற்ற இருவரும் சமாதானம் ஆகவில்லை.

சட்டசபை தேர்தலில் இரு இடங்களில் வெற்றி பெற்ற விசிக, விஜய் தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்து கொண்டது. இது, திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை முன்னணி தலைவர்கள் நேரடியாக வெளிப்படுத்தவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தியபடி இருந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் சீட் கிடைக்காத விசிக முன்னாள் எம்.எல்ஏ., பனையூர் பாபு, திருமாவளவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அவரை இன்று தங்கள் கட்சியில் திமுக சேர்த்துக் கொண்டது. அதுவும் கட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் விழா நடத்தி, அவரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

‘தங்கள் எண்ணத்துக்கு மாறாக தவெக அமைச்சரவையில் இணைந்தது மட்டுமின்றி, விஜய் அரசுக்கு ஆதரவாகவும் பேசி வரும் திருமாவுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்’ என்கின்றனர், திமுகவினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *