பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகல்- மீண்டும் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
1 min read
O. Panneerselvam’s withdrawal from the BJP alliance – a chance to join the DMK
31.7.2025
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் சென்னை வருவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை விமான நிலையம் வந்தபோது, அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அவர், கூட்டணி குறித்து நாளை (இன்று) சென்னையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டார். இந்நிலையில், சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
இன்று காலை முதல் நடைபெற்ற ஆலோசனையில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில்(பாஜக கூட்டணி) இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்
எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே த.வெ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.