தோரணமலையில் வருணகலச பூஜையுடன் சுதந்திரதின கொண்டாட்டம்
1 min read
Independence Day celebration with Varnakalasha Puja at Thoranamalai
15/8/2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலைஅகத்தியர், தேரையர் வாசம் செய்த ஸ்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் சுதந்தி்ரதினம் கொண்டாடப்பட்டு வருகிறம்.
இன்று ஆடி மாத கடைசி வெள்ளி என்பதால் வர்ணகலச பூஜையுடன் சுதந்திரதினம் கோலாகலமாக நடந்தது.
அதிகாலையில் பக்தர்கள் மலையில் இருந்து 21 குடத்தில் சுனைநீர் கொண்டுவந்தனர். அந்த நீரால் உற்சவர்கள் முருகன், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து வருணகலச பூஜை நடந்தது.

பூஜையில் தேசியகொடி வைக்கப்பட்டு அதற்கும் தீபாராதனை நடந்தது.
முத்துமாலைபுரத்தில் உள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலாநினைவு மாலை நேர இலவசப் படிப்பக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள்காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வேடம் அணிந்து வந்திருந்தனர். சுமார்40 மாணவ-மாணவிகள் இதேபோல் வேடம் அணிந்து வந்திருந்தனர். மேலும் தோரணமலையில் தங்கி போட்டித்தேர்வுக்கு படிப்பவர்களும் பூஜையில் பங்கேற்றனர்.
இதனை அடுத்து பூஜையில் வைக்கப்பட்ட தேசியகொடி நடப்பட்டு இருந்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பக்தர்களே தேசியக் கொடியை ஏற்றினர். தேசியக் கொடி பறந்த நிலையில் அதற்கும் தீபாராதனை காட்டப்பட்டது. அனைவரும் கொடி வணக்கம் செய்தனர்.
விழாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதோடு தோரணமலையில் திருமணம் செய்த தம்பதிகளுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காலைமுதல் மாலைவரை அன்னதானம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.
முன்னதாக அவர் பேசும்போது கிராமப்புற மாணவ-மாணவிகள் ஆங்கில அறிவு பெறவேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் மாலைநேர இலவச படிப்பத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் கிராம மேம்பாட்டிற்காக அரசு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.