June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

79-வது சுதந்திர தின விழாவில் 103 நிமிடங்கள் பேசி மோடி சாதனை

1 min read

Modi sets new record by speaking for 103 minutes at 79th Independence Day celebrations

15.8.2025
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று பேசியது புதிய சாதனையாக மலர்ந்துள்ளது. அவர் 103 நிமிடங்கள் சுதந்தர தின உரையாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது 98 நிமிடங்கள் பேசியதுதான் சாதனையாக இருந்தது. இன்று அந்த தனது சாதனையை பிரதமர் மோடியே முறியடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

2017-ம் ஆண்டு பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது 56 நிமிடங்கள் பேசினார். அதுதான் அவரது குறைந்த நேர சுதந்திர தின உரையாகும்.
இந்த சுதந்திர தினத்தில் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் மூலம் பிரதமர் மோடி மற்றொரு புதிய சாதனையும் படைத்து இருக்கிறார். நேருவுக்கு அடுத்தபடியாக அதிக தடவை சுதந்திர தின கொடி ஏற்றியவர் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்து உள்ளது. இதுவரை 2-வது இடத்தில் இருந்த இந்திரா காந்தியின் சாதனையை இப்போது பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *