June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தேசியக் கொடியை அவமதித்ததாக அசாமில் பள்ளி தலைமை ஆசிரியை கைது

1 min read

School headmistress arrested in Assam for insulting national flag

17.8.2025
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், தேசியக் கொடியை கால்களால் மிதித்து அவமதிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தலைமை ஆசிரியை பதேமா காத்தூன் என்பவரை கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *