June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில்வே அலுவலகப்பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

1 min read

Railways orders to increase use of Hindi in office work

26.8.2025
தெற்கு ரெயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரெயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிகப் பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தெற்கு ரெயில்வேயில் இந்தியில் பேசும் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இதற்கிடையே மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள ரெயில்வே ஊழியர்கள் உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, டிக்கெட் கவுண்ட்டர்களில் உள்ள பணியாளர்கள் இந்தியில் பேசுவதால் தமிழக பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமத்தை சந்தித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயின் அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென தெற்கு ரெயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, சிறு, சிறு குறிப்புகள் கூட இந்தியில் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே, அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “அலுவலகப்பணிகளில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19-ந் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். கடித பரிமாற்றங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும். துறை ரீதியான ஆய்வு கூட்டங்களில் இந்தி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை இந்தி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், தெற்கு ரெயில்வே அறிவிப்புகள், ஒப்புதல், ஏற்பு, அனுமதி, முன்மொழிவு உள்ளிட்ட வார்த்தைகளை இந்தியில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *