வடகரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
1 min read
Leopard movement in the North Coast region
8.9.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை பகுதியில் பாறை மீது பாய்ந்து சென்ற சிறுத்தையை கண்ட பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம்
பிடித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை
அடிவார பகுதியில் சிறுத்தை, யானைகள், கரடி, மான், குரங்கு உள்பட ஏராள மான வன விலங்குகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கேரளா பகுதியில் இருந்து விரட்டிவிப்படும் ஏராளமான யானைகள் அடர்ந்த வனப்ப குதியில் சுற்றித்திரிந்து, அதி காலை நேரங்களில் வடகரை பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன
அதேபோல் சிறுத்தை போன்ற விலங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், ஆடுகள் போன்றவற்றை கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன மேலும் சிறுத்தைகள் பொது மக்களை தாக்கி விடுகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலையில் வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையின் மீது படுத்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாலிபர்கள் சிலர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்களின் செல்போன் மூலம் சிறுத்தையை வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது அந்த அங்கிருந்து எழுந்து சென்று அந்த பகுதியில் இருந்த பாறை குகைக்குள் சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுவரை மான், மிளா, நரி, கரடி, யானை போன்ற விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நடமாடிய நிலையில் நேற்று அந்த பகுதியில் சிறுத்தை நடமாடுவதை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறையினர் மூலமாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.