திமுக அரசுக்கான ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது; மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min read
The principleless crowd knows nothing; Chief Minister M.K. Stalin
14.9.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி சென்றுள்ளார். அவர் அங்கு நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 2 ஆயிரத்து 885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், இந்த அரசு விழாவில் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியவதாவது:-
மக்களிடம் திமுக அரசுக்கான ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது. வரும் வழியெல்லாம் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்ததால் கிருஷ்ணகிரிக்கு வர தாமதமானது. தமிழ்நாடு அரசு, இந்தியாவுக்கே முன்னோடியாக இருக்கிறது. வட இந்திய யூடியூப் சேனல்கள்கூட திராவிட மாடலை பற்றி ஆய்வு செய்து அவர்கள் மாநில மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கின்றனர். இது எதுவுமே சிலருக்கு தெரிவதில்லை. தெரிந்தும் மறைக்க விரும்புகின்றனர். பொய்களை பரப்புவதும், களங்கம் கற்பிப்பதும் காலம் காலமாக அவர்கள் அரசியல், கொள்கையற்ற கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. மலிவான அரசியல் அது.
இவ்வாறு அவர் பேசினார்.