வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? – மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
1 min read
Foreign investment? Investment abroad? – Vijay’s question to M.K. Stalin
20.9.2025
நேரடியாக கேட்கிறேன் CM சார், மிரட்டி பார்க்கிறீங்களா?- நாகையில் கர்ஜித்த த.வெ.க. தலைவர் விஜய்
நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதவாது:-
மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள். அந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. இந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. அதற்கான காரணங்களை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைத்தும் சொத்தையாக இருக்கும். அங்க பேசக்கூடாது, இங்க பேசக்கூடாது. ஐந்து நிமிடம்தான் பேசனும், 10 நிமிடம்தான் பேசனும்..,
நான் பேசுறதே 3 நிமிசம்தான். அந்த நேரத்தல நான் அத பேசக்கூடாது, இத பேசக் கூடாதுன்னு சொன்னா? நான் எதைத்தான் பேசறது? அரியலூருக்கு போகும்போது, ஒரு ஏரியாவுக்குள் நுழையும்போதே மின்சாரம் தடை. திருச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்பீக்கருக்கு சென்ற வயர் கட்.
உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் இங்கே வருகிறார் என்று வச்சிக்கோங்க., பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க. இதேபோன்ற கண்டிஷன் போடுவீங்க.., இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க.., கட் பண்ணிதான் பாருங்களேன். முடியாதுல… பேஷ்மென்ட் அதிரும்ல. நீங்கதான் மறைமுக உறவுக்காரர்கள் ஆயிற்றே. பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே… மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக தி.மு.க. கிடையாது. இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களை என பிரித்து பார்க்க நாம் பாசிச பா.ஜ.க.வும் கிடையாது.
மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்.., அவர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்கான குரல் கொடுக்கிறதும், அவர்களுக்காக நிக்கிறதும் நமது கடமை இல்லையா?
மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.
நாகப்பட்டினத்தில் பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம்.
Cஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக்கொண்டே பேசுகிறார் CM.
கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த கும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா… நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.
மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
நாகை மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
நாகை பேருந்து நிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரெயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை.
நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல, எப்போதோ வந்துவிட்டேன். நேரடியாகவே கேட்கிறேன். CM சார் மிரட்டு பார்க்கிறீங்களா?. அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை சார். கொள்கையை பேருக்கு வச்சிக்கிட்டு, குடும்பத்தை வச்சி கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமான உழைச்சி சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?.
உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன். அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது?
பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே… மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.
இவ்வாறு விஜய் ஆவேசகமாக பேசினார்.