June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆவேசம்

1 min read

Minister T.R.P. Raja furious over question about Vijay

20.9.2025
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது ” CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. * குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்துள்ளாரா? என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி. ராஜா “கண்டது கழியது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்” என பதில் அளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *