June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில் விலை குறைப்பு

1 min read

Price reduction of bottled drinking water sold at railway stations

21.9.2025
“ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ‘ரெயில் நீா்’ விலை 1 ரூபாய் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.. இது தொடா்பாக அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் ஐஆா்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: – ‘
ரெயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரெயில் நீா்’ ஒரு லிட்டா் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.15 என்பதில் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டா் பாட்டில் விலை ரூ.10 என்பதில் இருந்து ரூ.9-ஆகவும் குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமலுக்கு வர உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் படி பல்வேறு பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் ரெயில் நீர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *