June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

வனஉயிரினங்கள் வெளிவரும் இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்த முடிவு

1 min read

Decision to install automatic cameras at wildlife sightings

6.10.2025
வன உயிரினங்கள் வெளிவரும் இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண் காணிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது என மாவட்ட வனஅலுவலர் தெரிவித்துள்ள்ளார்.

இதுகுறித்துதென்காசிமாவட்ட வன அலுவலர் ரா. ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி வனக்கோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விளைநிலங்களில் பசுந்தீவனத்திற்காக வன உயிரினங்கள் வந்து செல்வதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

தென்காசி வனக்கோட்ட களப் பணியாளர்களுடன், திருநெல் வேலி வனப் பாதுகாப்பு படை பணியாளர்கள் களப்பணியாளர்கள் என 7 வெவ்வேறு தனிப்படை அமைத்து இரவும் பகலுமாக கண்காணித்து வருகின்றனர். இதில் சுமார் 70-80 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

வனஉயிரினங்களை சுட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் கடந்த ஒருவார காலமாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்ம தியடைந்துள்ளனர்.
வனத் துறையினருடன் விவசா யிகளும் அவ்வப்போது வந்து பார்த்து செல்கின்றனர். இதன் அடுத்தகட்ட நகர்வாக வனஉயிரி வங்கள் வெளிவரும் இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத் தப்பட்டு பதிவு செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தி லிருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேசு மலை புலிகள் காப்பகத்திலிருந்தும் யானைகள் நடமாட்டத்தை கண்காணிப்பதில் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அக்டோபர் 6-ந் தேதி(நேற்று) முதல் கண்காணிக்கப்பட வுள்ளது.

மேலும்,மதுரையிலிருந்து வனக்கால்நடை அலுவலர் கலைவாணன் தலைமையில் திருநெல்வேலி வனக் கால்நடை மருத்துவர் மனோகரன், சாந்தகுமார் மற்றும் வல்லுநர் குழுவினருடன் இப்பகுதியிலுள்ள வன உயிரினங்களின் குணாதிசயம், நடவடிக்கை, இயல்பு, வெளியே வருவதற்கான காரணம் மற்றும் இதற்கான தீர்வு வழிகளை களஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

வன உயிரின நடமாட்டம் தென்படும்போது, வெளியில் வரும் போது பொதுமக்கள் அதை வேடிக்கை பார்க்கவோ, தொந்தரவு செய்யவோ, புகைப்படங்கள் எடுக்கவோ வேண்டாம். வன உயிரினங்களை எங்கு எப்போது பார்த்தாலும் அருகிலுள்ள வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கவும். நடை பயிற்சிக்கு செல்வோர் காலையில் விடிந்தபின் மாலையில், இருள் சூழ்வதற்கு முன் பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
இவ்வாற அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *