June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: கனிமவள வாகனங்கள், கிரஷர் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

1 min read

Tenkasi: Restrictions on mineral vehicles and crusher owners

6.10.2025
தென்காசி மாவட்டத்தின் வழியாக கேரளாவிற்கு கனிமங்கள் ஏற்றி செல்லும் கனரக வாகன
உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த் தலைமை தாங்கினார். தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என் சரவணபவன், தென்காசி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் வினோத், தென்காசி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ.தமிழ் இனியன், ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ், செங்கோட்டை தாசில்தார் ஆ. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து கிரஷர் உரிமையாளர்கள் இந்தியன் டிரைவர் சொசைட்டி செயலாளர், செங்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தென்காசியில் இருந்து கனிமவளங்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டத்தின் வழியாக வந்து புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு சென்று வருகிறது.
மேற்படி கனரக வாகனங்களால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கனரக வாகனங்களால் சாலைகள், குடிநீர் இணைப்புகள் சேதமடை வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாலும் அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாலும் பொதுமக்கள் வாகனங்களை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகனங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு 04.10.2025 ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அலுவலகத்தில் வைத்து இணைப்பில் குறிப்பிட்டுள்ள லாரி சங்க உறுப்பினர்கள். குவாரி சங்க உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அதிகாரிகள் ஆகியோர்களை வரவழைத்து அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்களின் நேரக்கட்டுபாடு மற்றும் வேகக்கட்டுபாடு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தும் பொருட்டு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

  1. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.அ1/14411/2022 நாள்-24.09.2024 -ன் படி கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தென்காசி மாவட்டத்திற்குள் பயணிப்பதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள கால வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அனுமதி வழங்கப்படும் கால வரையறை விபரம் வருமாறு:-

திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 10.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை மற்றும் இரவு 08.00 மணி முதல் காலை 06.00 மணி வரை
சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாலை 04.00 மணி முதல் திங்கள் கிழமை காலை 06.00 மணி வரை.மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் கிரஷர்-இருந்து வாகனங்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும். இந்த வரையறையை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிரஷர் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை மீறி அதிக பாரம் சம்மந்தப்பட்ட வாகனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அனைத்து வாகன கொண்டு செல்வது உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாத நிலையில், அத்தகைய வாகனங்களால் விபத்து ஏற்படும்போது, உரிய நிகழ்வுகளில் கிரஷர் உரிமையாளர் மற்றும் நடத்துனரும் பொறுப்பாவர் என்பதை அறியவும்.
கனிமங்களைஏற்றிக்கொண்டு செல்ல தென்காசி மாவட்டத் திற்குள் வரும் காலி வாகனங்களால் விபத்துகள் ஏதும் ஏற்படாத வண்ணம் மாவட்டத்திற்குள்
மிக குறைவான வேகத்தில் செல்லுமாறு கனிம வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் நகர் பகுதியில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளைகளை மீறும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கனரக வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றி செல்லும்போது அடிக்கடி புளியரை S வளைவில் வாகனம் பழுதாகி நின்றுவிடுவதினால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், வாகன ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும்போது செல்போன் மற்றும் ஹெட் போன் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. புளியரை சோதனை சாவடியில் கண்டிப்பாக நடைசீட்டினை பதிவு செய்ய வேண்டும்.
கனிமவளங்கள் ஏற்றி செல்லும் அனைத்து கனரக வாகனங்களிலும் துணை இயக்குநர் கனிமம் மற்றும் சுரங்கதுறை அவர்களின் சுற்றறிக்கை கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பொறுத்தப்படாத வாகனங்களில் இரண்டு வாரத்திற்குள் கட்டாயமாக பொறுத்தப்பட வேண்டும்.

கனிமவளங்கள் ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் காற்றில் கனிமங்கள் பறக்காதவாறு கனிமங்களை சுற்றி தார்ப்பாய் போட்டிருக்க வேண்டும்.
கனரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்லும்போது, சக்கரங்களை மேலே உயர்த்தி வைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க
வேண்டும். அது போன்று இயக்கப்படும் வாகனங்களுக்கு அதிக பாரம் ஏற்றப்பட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

சாலைகளின் ஓரங்களில் எந்தவிதமான கனிம வள கனரக வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அனைத்து கனரக வாகனங்களிலும் Dash Camera பொறுத்தப்பட வேண்டும்.

கனரக வாகனகண்ணாடிகளில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கான கருப்புக் கலர் ஸ்டிக்கர் ஒட்டப்படக் கூடாது. ஒட்டப்பட்டுள்ள வாகனங்களிலிருந்து அவற்றை இரண்டு நாள்களுக்கு அகற்ற வேண்டும்.
மேற்கண்ட கட்டுப்பாடுகளை மீறும் கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமை யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *