June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஹமாஸ் கையெழுத்திட்டுவிட்டது-டிரம்ப் சொல்கிறார்

1 min read

Trump says Israel, Hamas have signed peace deal

9.10.2025
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டு வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தங்கள் படைகள் வெளியேறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்! இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல், சுற்றியுள்ள அனைத்து நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். மேலும் இந்த வரலாற்று மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வை நிகழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்!” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, காசாவிற்குள் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் மற்றும் உதவி நுழைவுக்கான ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்ததாக எகிப்திய அரசு தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *