June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை உடல்

1 min read

Baby’s body found on Sengottai railway station tracks

17.10.2025
செங்கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்கப் பட்டது. அங்குள்ள கண் காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தையின் உடலை நாய் கவ்விச் செல்லும் காட்சிகள் பதி வாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

செங்கோட்டை ரெயில்நிலைய 1-வது நடைமேடை அருகே உள்ள தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று கிடப்பதாக நேற்று அதிகாலை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, தண்டவாளத்தில் தலைப்பகுதி சிதைந்த நிலை யில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அந்த உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரெயில் நிலைய வளாகத் தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, நாய் ஒன்று அந்த பச்சிளம் குழந் தையின் பிணத்தை கவ்வி இழுத்தவாறு தண்டவாளத்தில் தில் செல்லும் காட்சிகள் பதி வாகி இருந்தது.

எனவே அதற்கு முன்னதாக குழந்தையை யாரோ தண்டவாள பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என போலீ சார் கருதுகின்றனர். இது இறந்து பிறந்த குழந்தையா? அல்லது யாரேனும் தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து இங்கு வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *