June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

1 min read


One arrested with Rs. 10 lakh worth of tobacco products in Pavurchatra

17.10.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்து தென்காசிக்கு வேனில் கடத்தி வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு இன்று மாலை வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிமுத்து உதவி ஆய்வாளர் பட்டுராஜ் மற்றும் போலீசார் காய்கறி சந்தை பகுதியில் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவேனை போலீசார் வழிமறித்தனர்.

அப்போது அந்த வேன் போலீசார் நிறுத்துவதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை விரட்டிச் சென்று வழிமறித்தனர். உடனடியாக அந்த வேனின் கதவுகளை திறந்து சோதனை செய்த போது அந்த வேனில் முழுவதுமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் பார்த்தனர்.

உடனடியாக அந்த நபரையும், அந்த வேனையும் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து பார்த்தபோது அந்த வேனில் 62 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதில் 50 மூட்டைகளில் கணேஷ் புகையிலையும் 12 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கூல்ப் வகை புகையிலையும் இருந்தது. அதன் மொத்த எடை 865 கிலோ ஆகும் இதன் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என தெரிய வந்துள்ளது.

உடனடியாக அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர் ராஜஸ்தான் மாநிலம் சல்பாடியாநாகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்சந்த் என்பவரின் மகன் மண்பூர்சாமி (வயது31) என்பதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இந்த நபர் இதே வேனில் 10 நாட்களுக்கு ஒரு முறை பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை ஏற்றி வந்து தென்காசி பாவூர்சத்திரம் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

உடனடியாக பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) காளிமுத்து, உதவி ஆய்வாளர் பட்டுராஜ் ஆகியோர் அவரை கைது செய்தனர். மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 865 கிலோ எடையுள்ள 62 மூட்டை களையும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மண்புர்சாமியை தென்காசி நீதிமன்றத்தில் ஆரிய படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அந்த அந்த நபரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *