June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க. சொல்லியே அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சித்தேன்- செங்கோட்டையன் பேட்டி

1 min read

BJP. I tried to unite AIADMK by saying – Sengottaiyan interview

7.11.2025
அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமியின் மகன், மருகன் உள்ளிட்ட உறவினர்கள் தற்போது அ.தி.மு.க.வை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றார்.

யார் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் வைத்தது இல்லை.

சாதாரண பெண்ணுக்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்டவர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் நடந்த கொலைக்காக சி.பி.ஐ. விசாரணை கேட்காதது ஏன்?

பா.ஜ.க. என்னை அழைத்து கூட்டணிக்காக பேச வேண்டும் என கூறினர்.

என்னை அழைத்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என பா.ஜ.க. பேசியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *