June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக மாதாந்திர கூட்டம்

1 min read

Kadayam Thiruvalluvar Kazhagam Monthly Meeting

6.12.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்று(சனிககிழமை) கடையம் வடக்கு தேர் தெருவி்ல் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் கழக செயலாளர் கல்யாணிசிவகாமிநாதன் வரவேற்றார்.
“நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்ற தலைப்பில் கோ.அனிதா ஷிபா லில்லி, “பேரறிவாளன் திரு” என்ற தலைப்பில் இராஜாராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
குறள் சிந்தனை பற்றி சா.மாடசாமி, அறிவுடை நம்பி ஆகியோர் பேசினார்கள. அந்தோணிராஜ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தினை கே.டி.ஆர்.சண்முகசுந்தா வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *