திருவள்ளூர் அரசுப்பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 7ம் வகுப்பு மாணவன் பலி
1 min read
7th grade student dies after wall collapses at Tiruvallur government school
16/12/2025
திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இன்று (டிச.,16) மதிய இடைவெளியின் போது உணவு அருந்தி கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவன் மீது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து பள்ளிக்கு மாணவனின் உறவினர்கள், பெற்றோர் விரைந்தனர். பள்ளி நிர்வாகத்துடன் மாணவனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ''பழமையான பள்ளி சுவரை பராமரிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளியின் முன்பு, மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.