ஆஸ்திரேலியா தாக்குலில் துணிச்சலாக செயல்பட்டு துப்பாக்கியை பிடுங்கிய நபர்
1 min read
Man who bravely grabbed gun during Australia attack
16.12.2025
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை – மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்
இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அகமத் அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய அகமதுவின் உறவினர் முஸ்தஃபா, “அகமத் ஒரு ஹிரோ என்றும், இரு இடங்களில் குண்டடிப்பட்ட அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.