புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றதால்மனைவி, 2 மகள்களை கொன்று புதைத்த நபர்
1 min read
Man kills wife, 2 daughters for leaving home without wearing burqa
17.12.2025
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் ஹொரி தவுலத் கிராமத்தை சேர்ந்தவர் பரூக்கி. இவருக்கு திருமணமாகி தகீரா என்ற மனைவியும், அப்ரீன் (வயது 12), சஹாரீன் (வயது 5) என 2 மகள்களும் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி தகீரா புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே தெருவில் நடந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரூக்கி புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றது குறித்து மனைவி தகீராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விசாரணையில் புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியேறியதால் மனைவியையும் , தடுக்க முயன்ற 2 மகள்களையும் கொன்று புதைத்ததாக பரூக்கி போலீசாரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், பரூக்கியை கைது செய்தனர். பின்னர், வீட்டினுள் புதைக்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி, 2மகள்களை பரூக்கி கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.