June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து காவலர் தற்கொலை

1 min read

Policeman commits suicide by consuming poison near Sankaran Temple

29.12.2025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தனபாண்டி மகன் சுந்தர்(வயது 31) இவர் சென்னையில் காவல்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் இவர் சொந்த ஊரான இருமன்குளத்தில் விடுமுறைக்காக வந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

மயங்கி கிடந்த அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இவர் எதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் ?என்பதை பற்றி
சங்கரன்கோவில் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *