ஆயிரப்பேரி தேவர் சமுதாய இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்
1 min read
Pongal sports competitions on behalf of the Ayyarperi Thevar community youth team
20.1.2026
தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி கிராமத்தில் தேவர் சமுதாய இளைஞர் அணி சார்பில் 19 வது ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
ஆயிரப்பேரி தேவர் சமுதாய இளைஞர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 19 வது ஆண்டு நடைபெற்ற பொங்கல் போட்டியில் ஆண்கள்,பெண்கள், சிறுவர்,சிறுமியர் மற்றும் மழலையர்கள் என பல்வேறு பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரப்பேரி தேவர் சமுதாய நாட்டாமை மு.முருகன் தலைமை தாங்கினார்.
ஆயிரப்பேரி தேவர் சமுதாய இளைஞர் அணி நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், மணி(எ) நாராயணன்,மு.முத்துக்குமார்,
இசை குரு, வழக்கறிஞர் என்.சுந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ந.இசக்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இந்த விளையாட்டுப் போட்டியில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தங்கப்பாண்டி, நீலகண்டன், முருகேஷ், வழக்கறிஞர் சுந்தர், முத்துக்குமார்,தங்கமாரி, ஆட்டோ. சுரேஷ்,பாஸ்கர் என்ற பாபநாசம், நாராயணன் என்ற மணி,இசைகுரு,சங்கர், கிருஷ்ணகுமார்,மகேஷ், லோகேஷ், திருப்பால், சுரேஷ்,கார்த்திக்,சந்தோஷ், அருண், ராம்குமார்,சுரேந்தர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆயிரப்பேரி தேவர் சமுதாய நாட்டாண்மை முருகன் சிறப்பு பரிசுகளை வழங்கி அனைவரும் நன்றி கூறினார்.