June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் பாஜக அரசு; முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min read

Chief Minister Stalin alleges obstacles to Tamil Nadu’s development

சென்னை,ஜன.23-
தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து போட்டு வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டுஇருப்பதாவது:-
‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, ஹிந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திட பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திமுக. அதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழகத்தை வஞ்சிக்கிறது.

தமிழ்மொழியின் மீது ஹிந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் மத்திய பாஜ அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *