June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே ஆட்டோவில் இருந்துதவறி விழுந்த பெண் பலி

1 min read

Woman dies after falling from auto near Sankarankovil

25.1.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காட்டு வேலைக்கு ஆட்டோவில் சென்ற போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலான்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாடசாமி. கூலித்தொழிலாளி இவரது மனைவி உடையம்மாள் (வயது 60). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று உடையம்மாள் உள்ளிட்ட 10 பேர் அங்குள்ள செட்டிகுளம் ஊரைச் சேர்ந்த பழனியாச்சி என்பவரது காட் டில் உளுந்து பயிர்அறுக்கும் வேலைக்கு சென்றிருந்தனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து செட்டிகுளம் ஊரை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் ஆட்டோவில் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வரும் வழியில் மீன்துள்ளி ஊர் அருகே ஒரு வளைவில் ஆட்டோ திரும்பும் போது எதிர்பாராத விதமாக உடையம்மாள் ஆட்டோவில் இருந்து தவறி வெளியே விழுந்தார். இந்த விபத்தில் உடையம்மாள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடையம் மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சின் னக்கோவி லாங்குளம் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *