பரமக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் உறுப்பு தானம்
1 min read
3 members of the same family donate organs in Paramakudi
6.2.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேசன் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்டுத்தி வருகின்றனர்.
இது குறித்து மெழுகு வர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார் கூறுகையில், ரத்த தானத்தை தொடர்ந்து உடல் உறுப்புகள் தானத்தின் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளைஞர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களை உடல் உறுப்புகள் தானம் செய்திட அரசு இணையதளத்தில் பதிவு செய்து வருகிறோம்.வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில்
உடல் உறுப்புகள் தான பதிவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 58 நபர்களை உடல் உறுப்புகள் தானம் செய்ய அரசு இணையதளத்தில் விருப்பப் பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பரமக்குடி
மெழுகு வர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார் ஏற்பாட்டில், பரமக்குடி காந்தி சிலை அருகே உள்ள நிவாஸ் பிரிண்டர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய முடிவு செய்து பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பதிவு செய்தனர்.
இதையடுத்து,உடல் உறுப்பு தானம் பதிவு செய்த 3 பேருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்தரசன் அரசு பதிவு சான்றிதழ் வழங்கினார். அதுசமயம் மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக் குமார், செவிலியர் கண்காணி ப்பாளர்கள் ராஜீ,அலமேலு மங்கை ஆகியோர் உடன் இருந்தனர்.