June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

2026 சட்டமன்ற தேர்தல்: இந்திய துணை தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை

1 min read

2026 Assembly Elections… Deputy Election Commission of India team visits Chennai

11/2/2026
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் பன்வர் பிரகாஷ், மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் மற்றும் பலர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் கூறுகையில், “தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு சென்னை மற்றும் புதுச்சேரியை அடைந்துள்ளது,” என்றார்.

தேர்தல் ஆணைய குழுவினர் நாளை, நாளை மறுநாள் (பிப். 12 மற்றும் 13) சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 12ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) துணை கமிஷனர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவையான முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *