June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

வங்கதேசத்தில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்து உடல் மீட்பு

1 min read

Hindu body recovered with hands and feet tied in Bangladesh

13.2.2026
வங்கதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒரு இந்து கொலை செய்யப்பட்டு உள்ளார். மவுல்விபசார் மாவட்டம் சம்பா பகுதியில், தேயிலை தோட்டத்தில் ரத்தன் சஹு வாகர்(வயது 28) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர் கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கண்டறியப்பட்டுள்ளார். அவரது உடலில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பேசியுள்ள ரத்தன் சஹு வாகரின் சகோதரர்,

“முந்தைய இரவு முதல் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தோம். இன்று காலை, அவரது உடல் தோட்டத்தில் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கு சென்று அவரை அடையாளம் கண்டோம். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கூறியுள்ளார்.
முன்னதாக மைமென்சிங் மாவட்டத்தில் 62 வயதான அரிசி வியாபாரி சுசென் சந்திர சர்க்கார் என்பவர் தனது கடைக்குள்ளேயே மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *