லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; டிஎஸ்பி இடமாற்றம்
1 min read
Female Inspector suspended for demanding a bribe; DSP transferred.
20.6.2026
லஞ்ச புகாரை விசாரிக்க சென்று, லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்; அவருக்கு உடந்தையாக செயல்பட்ட டி.எஸ்.பி.,யும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த வருவாய் துறை அதிகாரி மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் சென்றது. இன்ஸ்பெக்டர் விமலா, இதுகுறித்து விசாரணை நடத்தினார். லஞ்சமாக பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என, அந்த அதிகாரியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து அந்த அதிகாரி, போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ஐ.ஜி., துரைகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் விமலா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண், இன்ஸ்பெக்டர் விமலாவை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். மேலும், இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, டி.எஸ்.பி., ஜாய் தயாள், ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.