June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பைஜாமாவை கழற்றுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சியே- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 min read

Taking off pajamas is also attempted sexual assault – Supreme Court ruling

18.2.2026
அலகாபாத் உயர் நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தவாறு அளித்த நபர் மீதான போக்சோ வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில், தகாத முறையில் தொடுவதும், பைஜாமாவை கீழிறக்குவதும் பாலியல் வன்கொடுமைக்கான ஆயத்தம் மட்டுமே என்றும், அது வன்புணர்வு முயற்சி அல்ல என்றும் கூறியிருந்தது.

இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை குறையும் சூழல் ஏற்பட்டது. இந்த தீர்ப்பு விமர்சனங்களை ஏற்படுத்தியது

இதை கண்டித்து மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா எழுதிய கடிதத்தை ஏற்று, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், “நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டக் கொள்கைகளை மட்டும் கொண்டிருக்கக் கூடாது; பாதிக்கப்பட்டவர் மீதான இரக்கமும், மனிதாபிமானமும் அதில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற அமர்வு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை முயற்சி என்ற கடுமையான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

மேலும், பாலியல் குற்ற வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் உணர்வுப்பூர்வமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் இதற்காகப் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறும் தேசிய நீதித்துறை அகாடமியின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *