June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகங்கை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

1 min read

Durga Stalin’s darshan at Sivaganga Soumya Narayana Perumal Temple

22.2.2026
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இன்று தமிழக முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்.

அவரை சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின், கோவிலில் உள்ள சன்னதிகளில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுடன் துர்கா ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *