துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அடுத்த வாரம் காஷ்மீர் பயணம்
1 min read
Vice President C.P. Radhakrishnan to visit Kashmir next week
22.2.2026
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் காஷ்மீர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில்கீழ் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் காஷ்மீர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் கல்வி பயின்ற 59 ஆயிரத்து 558 மாணவ, மாணவியருக்கு வரும் 26ம் தேதி பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் பல்கலைக்கழத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை (பிப். 26) காஷ்மீர் செல்ல உள்ளார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பல்கலைக்கழக வேந்தர் நிலோபர் கான் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.