June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் தொழில் அதிபரின் மனைவியை மயக்கி ரூ.4 கோடி நகைகளை சுருட்டிய வாலிபர்

1 min read

A young man seduced a businessman’s wife in Chennai and stole Rs. 4 crore worth of jewelry.

25.2.2026
சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் மனைவியை மயக்கி அதே குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் சென்னை அண்ணா சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 36 வயதான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்தான் தொழிலதிபரின் மனைவியுடன் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்த திலீப் என்ற 34 வயது வாலிபர் பழகியுள்ளார்.

வாலிபர் திலீப்பின் தாய் சங்கீதா தான் முதலில் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியுடன் நெருங்கி பழகி இருக்கிறார். இதன் பிறகு தொழிலதிபரின் மனைவியும் வாலிபர் திலீப்பின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட திலீப் தொழில் அதிபர் மனைவியை காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையிலும் தொழிலதிபர் மனைவி தனது குடும்பத்தை மறந்து கள்ளக்காதலுடன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

கடந்த ஓராண்டாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில் வாலிபர் திலீப் தொழிலதிபர் மனைவியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அதிக அளவில் பறித்துள்ளார்.

தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தொழிலதிபர் மனைவியிடம் சென்று வாலிபர் திலீப் பணம் வாங்குவதை வழக்கமாகவே வைத்திருந்து உள்ளார்.

இப்படி தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து திலீப் 850 கிராம் தங்க நகைகள் 120 கிராம் வைர நகைகள் 2½ கிலோ வெள்ளி பொருட்கள்,ரூ.20,000 ரொக்க பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

இதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்று குடியேறி உள்ளார். இருப்பினும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு மேலும் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்.

நான் கேட்கும்போதெல்லாம் பணத்தை கொடுக்காவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தொழிலதிபர் மனைவியை வாலிபர் திலீப் மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன தொழிலதிபர் மனைவி தனது கணவரிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த சம்பவம் பற்றி வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திலீப்பின் தாய் சங்கீதா, அவரது தம்பி அங்கித் ஆகிய இருவரையும் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

தொழிலதிபர் மனைவியை மயக்கி நகை, பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்ற மன்மத வாலிபர் திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தொழிலதிபர் மனைவியிடம் இருந்து வாலிபர் திலீப் பறித்த நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள திலீப்பை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *