June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ப.சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி

1 min read

Enforcement Directorate granted permission to file case against P. Chidambaram

26.2.2026
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப்பதிவு செய்தது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு 2018-ம் ஆண்டு போடப்பட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு 2020-ம் ஆண்டு பதியப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், பிபு பிரசாத் ஆச்சார்யாவுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், PMLA குற்றப்பத்திரிகையில் வழக்கு தொடர கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2024-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனால் PMLA கீழ் வழக்கை சந்தித்த பலர் அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதனால் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு எதிரான வழக்க விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இரண்டு வழக்குகளில் ப.சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர அதற்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்து நீதிமன்றம் அனுமதி அளித்தால் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 6-வது பெயராக சேர்க்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கு குற்றபத்திரிக்கையில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *