June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தாம்பரம் அருகே ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த இரு மின்சார ரெயில்கள்

1 min read

Two electric trains collided head-on on the same track near Tambaram

28.2.2026
தாம்பரம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரெயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டநிலையில், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது.

சம்பவம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் அடிக்கடி தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *