June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தங்கப்பதக்கம்

1 min read

Gold medal for Tenkasi District Collector

28.2.2026
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோருக்கு முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் மற்றும் ரூபாய் 1,லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (26.022026) நடைபெற்ற அரசு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினம் பிப்ரவரி-24 குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோருக்கு முதல் பரிசுக்கான குழந்தை பாதுகாப்பு தின விருது, முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை யினையும் வழங்கினார்.

மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்டங்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றிய தற்காக தென்காசி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குழந்தை பாதுகாப்பு தின விருது மற்றும் முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் ரூபாய் 1, லட்சத்துக்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோருக்கு வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *