மேலப்பார்த்திபனூரில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கோலம்
1 min read
Awareness pledge on behalf of the Rural Livelihood Movement in Melaparthipanur
27.3.2027
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பார்த்திபனூரில்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்க
திட்ட இயக்குநர் பாபு தலைமை தாங்கினார்.உதவிதிட்ட அலுவலர் மகேந்திர ராஜவர்மன்,வட்டார இயக்க மேலாளர் தேவிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பரமக்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் சத்தியபிரியா அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ம்தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவது கடமை மட்டுமல்ல அது ஜனநாயகத்தின் பெருமை, தேர்தலில் 100 சதவீதம்
வாக்களிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி மகளிர்கள்,சுய உதவி குழுவினர் கலந்து கொண்டு ரங்கோலி கோலங்கள் மூலம் வலியுறுத்தினர்.பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கினைப்பாளர்கள்
சேதுபதி,சண்முகவேல், கேசவன்,
பாலசங்கீதா,சத்தியபிரியா, சுதாதேவி மற்றும் கணக்காளர் வனிதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்