June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜி7 மாநாடு: மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து ஜெய்சங்கர் – அனிதா ஆனந்த் ஆலோசனை

1 min read

G7 Summit: Jaishankar – Anita Anand discuss West Asian crisis

27.3.2026
பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகாரதுறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். அங்கு கனடா நாட்டின் வெளியுறவுதுறைக்கான மந்திரி அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து அனிதா ஆனந்த் தனது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வந்திருந்தபோது போடப்பட்ட ஒப்பந்தங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் இருவரும் விவாதித்தோம். இதில் நாங்கள் வர்த்தகம், மத்திய கிழக்கின் நிலைமை, மற்றும் அத்தியாவசிய கனிமங்கள், விவசாயம், கல்வி உள்ளிட்ட ஒத்துழைப்பு தொடர்ப்பான முக்கிய துறைகள் குறித்து விவாதித்தோம். இந்திய வெளியுறவு மந்திரியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு இந்தியா மற்றும் கனடா இடையேயான ராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டின் இடையே ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *