June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருந்தது -மு.க.ஸ்டாலின் பேச்சு.

1 min read

Women’s safety was a question mark during Edappadi Palaniswami’s rule – MK Stalin

2/4/2026
நடைபெறும் சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு மதச்சார்பற்ற முறபோக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பபாளர் ஆதரித்தும் , ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி , மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் , பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் , பவானி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஏ.சேகர் , அந்தியூர் தொகுதி திமுக வேட்பாளர் சிவபாலன் , கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் நல்லசிவம் , பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுந்தரம் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடையே தேர்தல் பிரச்சாரததில் ஈடுப்பட்டார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பகுத்தறிவு பகலவன் பெரியார் மண்ணில் இருந்து தமிழ்நாட்டின் திராவிட தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு கேட்டு வந்து இருக்கிறேன் ஈரோடு பெரியார் பிறந்த மண் இல்லை அண்ணா கலைஞர் வாழ்வு வளர்ந்து ஈரோடுஅண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை என்றால் நாம் இல்லை திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் தயாரா ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு வருகிறார் ஈரோடு கிழக்கு தொகுதி மூத்த தலைவர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திருமகன் ஈவெரா நின்ற தொகுதி ராகுல்காந்தி அறிவிக்கும் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் சாமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
உங்களால் உருவாக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அன்போடு உரிமையோடு வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
நம்ம களத்தில் திராவிட மாடல் வளர்ச்சி கொண்டு அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி மாவட்ட வளர்ச்சி இருக்க வேண்டும் என ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்..விவசாயிகள் போராட்டம் மேற்கு மண்டல கனவாக இருந்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் கொண்டு வரப்பட்டது
ஈரோடு மஞ்சள் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது நிபந்தனை பட்டா அயன் பட்டாவாக மாற்றி தரப்பட்டுள்ளது.விடுதலை போராட்ட வீரர் பொல்லான்,தீரன் சின்னமலை சிலை அமைக்கப்பட்டுள்ளது,ஈஸ்வரனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது, சித்தோடு ஆவின் நிர்வாகத்தில் பால்வள தந்தை பரமசிவம் சிலை அமைக்கப்பட்டுள்ளது,அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரி தாளவாடி அரசு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு கோபி சத்தியமங்கலம் பகுதியில் அறிவுசார் மையம்.மொடக்குறிச்சி பெருந்துறை சென்னிமலை போன்ற பகுதிகளில் கூட்டுகுடி நீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இது போன்று வேளாண்மை உள்கட்டமைப்பு தகவல் தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சி திட்டம் கொடுத்து இருப்பதால் உரிமையோடு கேட்டு வந்து இருக்கிறேன். எதிர்த்து நிற்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சி கீழ் பயன் பெற்றவர்கள் வீட்டுக்கு ஒருவர் இருக்கிறார்கள்எல்லாருக்கும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம் ஒரு கோடியே31ல்டசம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை விடியல் பயணம் தமிழ் புதல்வன் தோழி விடுதிகள் மகளிர் குழுவினருக்கு வரலாற்றில் இல்லாத வகையில் சுலநிதி வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் குறித்து நாள் முழுக்க பேச முடியும் நான் செல்லும் இடங்களில் எல்லாரும் அளவு இல்லா சந்தோஷத்துடன் வரவேற்கிறார்கள்
நாம் கொடுத்த திட்டம் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்..
குழந்தை திருமணம் குழந்தை பாலியல் வன்கொடுமை பாலினம் வளர் பிள்ளை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது டிஜிட்டல் குற்றத்திற்காக கடுமையான தண்டனை சட்டம் நிறைவேற்றம் செய்து இருக்கிறோம் குற்றம் நிகழ்ந்த 80நாட்களில் தீர்வு காணப்பட்டது தமிழகத்தில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பாஜக கிளை செயலாளர் எடப்பாடி பழனிசாமி வயிறு எரிகிறது திமுக ஸ்டாலினும்ஒரு தேர்தல் கூட ஜெயிக்க விட மாட்டீர்கள் என்று பொறாமையில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் பொள்ளாச்சி சம்பவம் அதிமுக ஆட்சிக்கு சாட்சி என்று இருக்கிறது பொள்ளாச்சி சம்பவம் இப்போது நம் காதுகளில் ஒலிக்கிறது
பொள்ளாச்சி சம்பவத்தில் வழக்கு போடாமல் காலம் செய்தார் ஆனால் குற்றவாளி ஆயுள் தண்டனை மற்றும் இழப்பீடு வழங்கியது திராவிட மாடல் ஆட்சி பெண் எஸ்பி வழிமறித்து டிஜிபி மிரட்டியது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரிய லீஸ்டு உள்ளது
பெண்கள் பாதுகாப்பு கேள்விகுறியாக இருந்தது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் இதை மறைக்காமல் என்று தமிழகத்தை கைப்பற்றலாம் என்று பாஜகவை கொண்டு வந்து இருக்கிறார். நீட் மெட்ரோ 100நாள் திட்டம் ஒழிப்பு விவசாயிகள் வேளாண் திட்டம் அமெரிக்க வரி விதிப்பு நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு இந்தி திணிக்க கல்வி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை இப்படி துரோகம் குற்றம் மேல் குற்றம் செய்பவர் தான் எடப்பாடி பழனிசாமி.மாநில உரிமைகள் காக்க தமிழ்நாடு தனித்துவத்தை காக்க திமுக கூட்டணி வைத்து இருக்கிறோம்
ஊழல் குற்றம் மொத்தம் எடப்பாடி பழனிசாமி செய்து இருக்கிறார்
தேர்தல் ஆணையத்திற்கர லஞ்சம் கொடுக்க முயன்றவர் உடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து கொண்டு மக்களை ஏமாற்ற பார் கிறார்கள்
தமிழ்நாடு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி 23ம் தேதி தூக்கி ஏறிவார்கள்.
தமிழ்நாடு காக்க திமுக கூட்டணி ஆதரிக்க வேண்டும் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் நடைபோடவும் தன்னிலம் இல்லா தமிழகம் இருக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *