பரமக்குடி முத்தால பரமேஸ்வரி கோவில் விழாவில் 6 ஆயிரம் பேர் பால்குடம் எடுத்தனர்
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; highlight: true; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;
6,000 people took milk jugs at the Paramakudi Muthala Parameshwari Temple festival
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் தெய்வமான ஆயிர வைசியர்களுக்கு புராதன பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோவிலின் பங்குனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்தாண்டு கோவிலின் பங்குனித் திருவிழா 24 ம்தேதி காலை கொடியேற்றத்துடனும் தொடங்கியது.
விழாவின் சிறப்பு விழாவாக ஏப்.1 ம்தேதி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நகரில் வீதிவலம் வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து
9 ம்நாளான ஏப்ரல் 1 ம்தேதி இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலின் நான்கு வீதிகளிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய விழாவாக பால்குட விழா நேற்று காலை சிறப்பாக நடந்தது. பரமக்குடி ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச் சங்கம், ஆயிர வைசிய மறுமலர்ச்சி பேரவை, மதுரையார் சங்கம், பாகம்பரியாள் பாதயாத்திரை குழு, விஸ்வகர்மா சபை செட்டியார் சமூக சேவை சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான சிறுவர், சிறுமிகள் உள்பட சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரில் வீதிவலம் வந்து கோவிலை சென்றடைந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் 12 அடி,16 அடி வேல் குத்தி நகரில் வீதிவலம் சென்று நேர்த்தி கடன் செலுத்தினர்.
பின்பு ஸ்ரீ முத்தாலம்மனுக்கு சந்தனம்,பன்னீர்,ஆப்பிள் பழம், பலாப்பழம்,திராட்சை,அண்ணாசி பழம்,கொய்யா பழம் உள்பட 33 வகையான அபிஷேகங்களை தொடர்ந்து பால் அபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. விஷேச தீபாரதனைகள் நடந்தன.
பரமக்குடி,இளையாங்குடி,ராமநாதபுரம், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.பால்குட விழாவினை பரமக்குடி வானவில் மங்களநாதன் தலைமையில் வானவில் கேபிள் நிறுவனத்தினர் அதிகாலை முதல் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
கடந்த 24 ம்தேதி முதல் தொடர்ந்து 11 நாட்கள் நடந்துவரும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை டிரஸ்டிகள் அம்பலம் பா.ஜெயராமன், வா.ரவீந்திரன், மானேஜிங் டிரஸ்டி சோ.பாலசுப்பிரமணியன் மற்றும் ஆயிர வைசிய சபை தலைவர் எஸ்.பாலுச்சாமி,இணை தலைவர் ராசி என்.போஸ்,செயலாளர் எஸ்.கே.பி.லெனின்குமார் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.