டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது- மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
Even if they invade from Delhi, Tamil Nadu will not bow its head – MK Stalin’s post
6.4.2026
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதல்-அமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
தமிழ்மண்ணில் நின்று, “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
இவற்றுக்கெல்லாம், பழனிசாமி தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.