June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளம், அசாம், புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

1 min read

Election campaigning ends in Kerala, Assam, Puducherry

7.4.2026
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நாளை மறுநாள் ( 9-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் கேரளம், அசாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேற்றுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று முடிவடைந்தது.

தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாளான இன்று 3 மாநிலங்களிலும் உச்சக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன. தேசிய கட்சிகளின் தலைவர்களும் இந்த மாநிலங்களில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

140 தொகுதிகளை கொண்ட கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் காண்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

மாநிலம் முழுவதும் 92 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி, தோல்வியை 2.71 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
அசாம்
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சிக்கு வர பா.ஜனதா முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. தேர்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 59 பேர் பெண்கள். மொத்த வாக்காளர்கள் 2.5 கோடி பேர் ஆவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி சென்றவர்களால் தான் பா.ஜ.க. பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. இதனால், அசாமில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இரு அரசியல் கட்சிகள் சார்பிலும் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் அங்கு தீவிரமடைந்துள்ளது.
புதுச்சேரி
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் இந்த தேர்தலை சந்திக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணி. இந்த முறை அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்கி உள்ளதால் பலமுனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் 9.48 லட்சம் பேர் ஆவர்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *