June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசை விமர்சிக்கும் அருகதை கனிமொழிக்கு இல்லை: அண்ணாமலை பேச்சு

1 min read

Kanimozhi has no right to criticize the central government: Annamalai speech

10.4.2026
ஊட்டி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து அண்ணாமலை பேசியதாவது:-
கடந்த இரண்டு முறை ஊட்டி எம்எல்ஏ இருந்தவர் ஒன்றும் செய்யவில்லை. இது காங்கிரசுக்கும் தெரியும். இதனால் வேட்பாளரை காங்கிரஸ் மாற்றிவிட்டது. ஊட்டி போன்ற நகர், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

ஈரான் போர் சூழ்நிலையில், யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது என சமாளித்து கொண்டு இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் , அவர்களின் வெளியுறவு கொள்கை காரணமாக நம்மை திருவோடு தட்டை ஏந்தி சாலையில் அமர வைத்து இருப்பார்கள்.
நாம் டில்லியில் எப்படி ஆட்சி நடத்தி வருகிறோம். ஈரான் போரில் நாம் எப்படி மக்களை காத்திருக்கிறோம் என்று பேச அருகதை இல்லாத தலைவர் கனிமொழி. காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் இருந்து 2014 இறங்கும்போத 14.5 கோடி குடும்பங்களிடம் மட்டும் காஸ் சிலிண்டர் இருந்தது. இன்று 33 கோடி குடும்பமாக உயர்த்தி உள்ளோம்.
99 சதவீதத்துக்கு மேல் காஸ் சிலிண்டர் கொண்டு வந்து இருக்கிறோம். எந்த தட்டுப்பாடும் இல்லாமல் சமாளித்து வருகிறோம். காஸ் நம்மால் செய்ய முடியாது. நமது ஊரில் இல்லை. குழியை தோண்டி காஸ் எடுக்க முடியாது. நம்மூரில் இல்லாத பொருளை வெளியில் இருந்து வாங்குகிறோம். நம்மூரில் இருக்கும்போது கட்டுப்படுத்த முடியும். வெளியில் இருந்து வாங்கியும் , அதை கட்டுப்படுத்தி யாருக்கும் எந்த பிரச்னை இல்லாமல் முடிந்த வரை சமாளித்து இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இதனை பாராட்ட மனமில்லாத திமுகவினர் தயவு செய்து பொய் சொல்லாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக உதகைக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தப்பட்து.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *