251 எம்பிக்கள் ஆதரவுடன் மக்களவையில் 3 மசோதாக்களும் அறிமுகம்
1 min read
All 3 bills introduced in Lok Sabha with the support of 251 MPs
16.4.2026
251 எம்பிக்கள் ஆதரவுடன் தொகுதி மறுவரையறையோடு இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகம் ஆன நிலையில், பின்னர் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்ய அதிக உறுப்பினர்கள் ஆதரவு என்பதால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி மசோதாக்கள் அறிமுகம் ஆனது.
மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 251 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிறப்புக் கூட்டத்தொடருக்கான வியூகம் குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி விவாதித்தனர்.
இந்நிலையில் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.பி.க்கள் மக்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து சென்றுள்ளனர்.
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
முன்னதாக தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கருப்பு கொடி பறக்க விட திமுக அழைப்பு விடுத்துள்ளது.