June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

லியோவுக்கு போப் ஆவதற்கு தானே காரணம்- டிரம்ப் சொல்கிறார்

1 min read

Trump says Leo is the reason he became Pope

17.4.2026
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது.
லெபனான் மற்றும் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் என்பது பைத்தியக்காரத்தனம், உலகில் அமைதி நிலவ வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை தலைவர் பதினான்காம் போப் அழைப்பு விடுத்தார்.
ஆனால் அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அமெரிக்க வெளியுறவு கொள்கையில் போப் தலையிட கூடாது. எனக்கு அவரை பிடிக்கவே இல்லை என முன்னதாக தெரிவித்த டிரம்ப் தன்னை இயேசுவாக சித்தரித்து ஏஐ புகைப்படம் வெளியிட்டார்.
ஆனால் போப் மீதான விமர்சனமும் அந்த புகைப்படமும் பல தரப்பில் இருந்து கண்டனத்தை குவித்த நிலையில் அந்த புகைப்படத்தை நீக்கினார்.

இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘போப் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அவருக்கு அந்த உரிமை உண்டு. ஆனால், இது நிஜ உலகம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் ஒரு பெரும் உலகளாவிய அச்சுறுத்தல் என்பதை போப் லியோ தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது. அது உலகிற்கே மிகப்பெரிய ஆபத்து’ என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த அவர் போப் ஆவதற்கு தானே காரணம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஈரான் தனது யுரேனிய இருப்பை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இசைந்துள்ளதாக டிரம்ப் தெரிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *