மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றவர் மீது கொலைவெறி தாக்குதல்
1 min read
Murderous attack on youth who tried to stop sand robbery near Madurai
28.4.2026
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மணல் கொள்ளையைத் தடுக்க சென்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் மக்கள் இடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது. குராயூர் பகுதியை சேர்ந்த கலா மற்றும் அஜித் என்பவர் தொடர்ந்து மணல் அள்ளி வருவதாக கூறப்பட்டுவருகிறது, இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது ஊர் வழியாக சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த லாரிகளைத் தடுத்து நிறுத்த முயன்ற பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்த இளைஞருக்குப் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் உடலெங்கும் ரத்தம் சொட்டச் சொட்ட வீடியோ வெளியிட்டிருப்பது பார்ப்பவர்களைப் பதறவைக்கும் வகையில் உள்ளது.
பின்னர், பிரகாஷ் சிகிச்சைகாக விருதுநகர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.மணல் கொள்ளை குறித்து பலமுறை ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.