June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

1 min read

Karnataka ordered to release water to Tamil Nadu in Cauvery

29.4.2026
காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அப்போதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மே மாத பங்கீடாக காவிரி ஆற்றில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *